சென்னை எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையிலிருந்து குழந்தைய திருடிய மணிமேகலை என்ற பெண்ணிடமிருந்து மீட்கப்பட்ட மற்றொரு குழந்தையை அவரிடமிருந்து பிரிக்க முடியாமல் காவல்துறையினர் தவித்து வருகின்றனர்.
ஒன்றரை வயதான அந்த ஆண் குழந்தையை கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி திருப்பூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவை - திருப்பூருக்கு இடையே திருடியதாக மணிமேகலை கூறியிருந்தார். குழந்தையின் பெற்றோர் யார் என தெரியாததால், அதனை காப்பகத்தில் ஒப்படைக்க காவல்துறையினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், மணிமேகலையை விட்டு குழந்தை வர மறுத்து தொடர்ந்து அழுவதால் காவல்துறையினர் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். வேறு யாரிடமும் வர மறுப்பதால், குழந்தையின் உடல்நலனை கருத்தில் கொண்டு மணிமேகலையிடமே அந்த குழந்தையை காவல்துறையினர் விட்டுவிட்டனர். நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்ட மணிமேகலையுடன் குழந்தையும் சிறையிலுள்ளது.