காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் முத்தியால்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள கழிவுநீர் பாதாள சாக்கடையை கடந்த 20ஆம் தேதி லட்சுமணன் என்பவர் சுத்தம் செய்ய இறங்கியுள்ளார். அப்போது அவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற சுனில் என்பவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார. மேலும் இதுதொடர்பாக சட்டப்படி உரிய விசாரணை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிகழ்வில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் தலா 10 லட்ச ரூபாய் மாவட்ட நிர்வாகம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.