தமிழ்நாடு

சென்னை அருகே 100 கிமீ தொலைவில் புயலின் மையப்பகுதி: 70-80 கிமீ வேகத்தில் வீசும் காற்று

சென்னை அருகே 100 கிமீ தொலைவில் புயலின் மையப்பகுதி: 70-80 கிமீ வேகத்தில் வீசும் காற்று

webteam

மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வருகிறது.

சென்னை அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயலின் மையப்பகுதி உள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் புயலின் மையப்பகுதி உள்ளது. மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வருகிறது. மாண்டஸ் புயல் 12 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்து வருகிறது. காற்று 70 முதல் 80கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருவதாக தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே பலத்த காற்றில் பெரிய மரம் வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அம்பத்தூர், பாடி, கொரட்டூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.