தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை பறிமுதல் செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பிரமுகர் ஹென்றி தாமஸ் என்பவர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், துப்பாக்கிகளில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை பறிமுதல் செய்து பாதுகாப்பாக வைக்கவும் மனுதாரர் தனது மனுவில் கோரியுள்ளார்.
மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிப்பது சரியாக இருக்காது என்று கூறியுள்ள மனுதாரர், சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாகத் தொடரப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.