தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து பேருந்துகள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கின.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. ஊதிய பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, நேற்று இரவு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தொமுச, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என அறிவித்தனர்.அதன்படி, கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.இன்று காலை முதலே ஊழியர்கள் பணிக்குத் திரும்பி வழக்கம்போல் பேருந்துகளை இயக்கத் தொடங்கினர்.