சென்னையில் அரசு பேருந்து ஓட்டுநர் செய்தித்தாளை படித்துக்கொண்டே பேருந்தை இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியிலிருந்து திருவான்மியூர் செல்லும் மாநகர பேருந்தின் ஓட்டுநர், பேருந்தின் ஸ்டியரிங் மீது செய்தித்தாளை படித்துக்கொண்டு பேருந்தை இயக்கியுள்ளது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 47D என்ற மாநகர பேருந்து ஆவடியில் இருந்து புறப்பட்டு திருவான்மியூர் சென்ற போது, அதன் ஓட்டுநர் பேருந்தை இயக்கியபடி செய்தித்தாளை படித்துள்ளார்.இது குறித்து பயணிகள் கேட்டதற்கு பதிலளிக்காமல், பேருந்தின் ஸ்டியரிங் மீது வைத்து புரட்டி புரட்டி படித்து வந்துள்ளார். இது அந்த பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளை அச்சப்பட வைத்துள்ளது. விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்ததில் அந்த 47D மாநகர பேருந்து, அம்பத்தூர் பணிமனையில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அம்பத்தூர் பணிமனை மேலாளர் சஞ்சய் குமாரிடம் கேட்ட போது, அந்த பேருந்தை இயக்கிய நபர் யார் என்று விசாரணை செய்து வருவதாகவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.