தமிழ்நாடு

இயக்கப்படாமல் இருக்கும் “ஜலராஜா”

இயக்கப்படாமல் இருக்கும் “ஜலராஜா”

webteam

கடந்த இரண்டு மாதமாக பழுதான சுற்றுலாத் துறையின் படகு சீராக்கப்படாததால் தேக்கடியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் கோடைக்கால சீசன் துவங்கியுள்ளது, கோடை துவங்கி சுற்றுலா பயணிகள் அதிகரிக்கரித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் படகு போக்குவரத்து உள்ளது. வனத்தின் ஊடே பயணிப்பதையும், வன விலங்குகளை காண்பதாலும் தேக்கடி படகு போக்குவரத்திற்கு தனிச்சிறப்பு உள்ளது. இதற்காக கேரள சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை சார்பில் தினமும் ஆறு படகுகள் வீதம் ஐந்து வேளைகளில் படகுகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் 120 பேர் பயணம் செய்யும் கேரள சுற்றுலாத்துறைக்கு சொந்தமான “ஜலராஜா” இரண்டு மாடி படகு கடந்த இரண்டு மாதங்களாக பழுதாகி ஏரியில் நிற்கிறது. இதனால் தினமும் 500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெகு தொலைவில் இருந்து தேக்கடிக்கு வந்தும் படகு போகுவரத்தில் செல்ல முடியாத ஏமாற்றத்தை தடுக்க பழுதான படகை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கேரள சுற்றுலாத்துறையினர் உறுதியளித்துள்ளனர்.