தமிழ்நாடு

4 மாதங்களில் 4ஆவது முறை‌யாக நிரம்பிய பவானிசாகர் அணை

4 மாதங்களில் 4ஆவது முறை‌யாக நிரம்பிய பவானிசாகர் அணை

webteam

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 4 மாதங்களில் 4ஆவது முறை‌யாக நிரம்பி வழிகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 105 அடி உயரமுள்ள அணை, மீண்டும் முழுகொள்ளளவையும் எட்டியுள்ளது. அணைக்கு ஆயிரத்து 935 கன அடி நீ வரத்து வந்துகொண்டிருக்கும் நிலையில், 3 ஆயிரத்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

1955ஆம் ஆண்டு முதலான அணை வரலாற்றில் முதல் முறையாக‌ தொடர்ந்து 4 மாதங்களாக அணை முழுகொள்ளளவில் நீடிக்கிறது. இந்நிலையில், வரும் 15ஆம் தேதிக்குப் பிறகு இரண்டாம் போக எள், கடலை பயிருக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.