தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

webteam

மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையிலும் நேற்று தொடங்கிய மழை இன்று காலை வரை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ அல்லது மண்டலமாகவோ மாற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆந்திரா, ஒடிஷா போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அப்பகுதியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி வராது எனவும் ஒடிஷா ஆந்திராவை நோக்கி செல்கிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இது வடகிழக்கு பருவமழையில் சேராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.