தமிழ்நாடு

திமுக கவுன்சிலர் வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.18.45 கோடி

கலிலுல்லா

சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் சொத்து மதிப்பு, சுமார் 18 கோடி ரூபாய் என கணக்கு காட்டப்பட்டுள்ளது.

பெருங்குடி பகுதியில் திமுக பகுதி செயலாளராக உள்ள ரவிச்சந்திரன், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களை நடத்தி வருகிறார். சென்னை சோளிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 184 ஆவது வார்டு திமுக வேட்பாளராக ரவிச்சந்திரன் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்தார். தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவர், தமது வேட்புமனுவில் 18 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து விவரங்களை காட்டியுள்ளார்.

அதே சோளிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் என்பவர் 6 கோடியே 4 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பை காட்டியுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காட்டிலும் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு அதிகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.