நாமக்கல் மாவட்டம் வடவத்தூர் தலமலை அடிவார பகுதியில் 20 கிலோ எடையுள்ள பழங்கால வெண்கல சிலை கண்டெடுக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் வடவத்தூர் தலமலை அடிவார பகுதியில் மருத காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலுக்கு பூஜை செய்ய சென்ற பூசாரி செந்தில், கோவில் வளாக பகுதியில் அவர் காலில் ஏதோ தட்டுபட்டுள்ளது. இதனையடுத்து ஊர் பொதுமக்கள் உதவியுடன் செந்தில் அப்பகுதியில் தோண்டியுள்ளார். அப்போது 2 அடி உயரமுள்ள கை, கால் பகுதிகள் சேதமடைந்த நிலையல் பழங்கால வெண்கல சிலை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து வருவாய் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிலை மீட்டு சேந்தமங்கலம் வட்டாட்சியர் செல்வராஜிடம் ஒப்படைத்தனர். 20 கிலோ எடை கொண்ட இச்சிலை தொல்பொருள் ஆராய்ச்சி துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு எக்காலத்தை சேர்ந்தது என தெரிய வரும் என வட்டாட்சியர் கூறினார்.