தமிழ்நாடு

நீண்ட இழுபறிக்கு பின்னர் அதிமுக மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு

JustinDurai

நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.விற்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன இந்த இரண்டு இடங்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் அதிமுக தன்னுடைய வேட்பாளர்களை அறிவித்துள்ளது,

முன்னாள் அமைச்சரான சிவி சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு இடங்களில் ஒரு இடம் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும் மற்றொரு இடம் ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி அவர்களது ஆதரவாளர்களை வேட்பாளர்களாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன இதில் முன்னாள் அமைச்சரான சிவி சண்முகம் எடப்பாடி பழனிச்சாமியாலும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மரை ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுத்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இதையும் படிக்கலாம்: பட்டியலின மக்களை இழிவாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது புகார்