தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும் 6வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும் 6வது மெகா தடுப்பூசி முகாம்

kaleelrahman

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 6 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

செப்டம்பர் 12 ஆம் தேதி 40,000 மையங்களில் நடைபெற்ற முதல் மெகா தடுப்பூசி முகாமில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல் இரண்டாவது முகாமில் 16.43 லட்சம் பேருக்கும், மூன்றாவது முகாமில் 24 லட்சம் பேருக்கும், 4வது முகாமில் 17.19 லட்சம் பேருக்கும், 5வது முகாமில் 22,52,641 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 6வது மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. தற்போது, தமிழக அரசின் கையிருப்பில் 66 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் உள்ளன. அசைவ பிரியர்கள், மது குடிப்போருக்காக ஞாயிற்றுகிழமைக்கு பதிலாக சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.