தமிழ்நாடு

மதுரை: கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட கல்தூண் கண்டெடுப்பு

webteam

மதுரையில் கி.மு. மூன்றாம் ஆம் நூற்றாண்டு தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட  கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே அமைந்துள்ளது கிண்ணிமங்கலம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஏகநாதசுவாமி மடத்தில் இருந்த கல்தூண் ஒன்றில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த கல்தூண் ஆண்டிப்பட்டி அருகே புலிமான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லுக்கு இணையானது எனவும், கல் தூணில் இதுபோன்ற தமிழி எழுத்துப் பொறிப்பு காணப்படுவது மிக முக்கியமான கண்டுபிடிப்பு எனவும்  தொல்லியல் அறிஞர்கள் தெரிவித்தனர். கல்தூணில் தமிழி எழுத்து என்பது அந்த காலகட்டத்தில் தமிழர்கள் பின்பற்றிய சமயம், பண்பாடு கட்டடக்கலை ஆகியவற்றை குறிப்பிடுவதாக உள்ளது. அதுமட்டுமன்றி கல்தூணில் உள்ள தமிழி எழுத்துக்களை ஏகன் ஆதன் கோட்டம் எனவும் கூறுகின்றனர். கோட்டம் என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் மட்டுமின்றி பிராமி வடிவில் கிடைத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.