2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் web
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 85.15% வாக்குப்பதிவு.. வரலாறு படைத்த 2026 தேர்தல்!

எப்போதும் இல்லாதவகையில் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Rishan Vengai

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் 85.15% வாக்குப்பதிவு பதிவாகி, இதுவரை இல்லாத சாதனை உருவாகியுள்ளது. சுமார் 4 கோடி 80 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர். 2021 தேர்தலை விட தபால் வாக்குகள் உட்பட 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடுதலாக வாக்களித்திருப்பது, மக்கள் அரசியல் விழிப்புணர்வு உயர்வை வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத அளவில் வாக்குப் பதிவாகியுள்ளது. இதுவரை 85 புள்ளி 15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது சுமார் 4 கோடியே 80லட்சத்துக்கும் அதிகமானோர்வாக்களித்துள்ளனர்.

கடந்த 2021சட்டமன்றத் தேர்தலில், ஒட்டுமொத்தமாக சுமார் 4 கோடியே 63லட்சம் பேர் வாக்களித்திருந்தனர். இதனை ஒப்பிடுகையில், கடந்த தேர்தலைவிட தற்போது, தபால் வாக்குகள் உட்பட சுமார் 24 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.

தமிழ்நாடு தேர்தல் 2026

முன்னதாக தமிழக வரலாற்றில் உச்சமாக, 2011 தேர்தலில் 78 புள்ளி 2 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது. இந்நிலையில், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், இரண்டு இடங்களில் வாக்குரிமை இருந்தவர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, ஒரு இடத்தில் நீக்கப்பட்டது. அதேபோல், இறந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதன் காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.