தமிழ்நாடு

ரேஸில் பயன்படுத்தப்பட்ட 19 பைக்குகள் பறிமுதல்

ரேஸில் பயன்படுத்தப்பட்ட 19 பைக்குகள் பறிமுதல்

webteam

சென்னையில் முதல்வர் பழனிசாமி வீட்டருகே ரேஸ் நடத்தியவர்களிடமிருந்து 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

அடையாறு திரு.வி.க. பாலத்தில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதி நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் வகையில் நடந்த பைக் ரேஸ் குறித்து புதிய தலைமுறையில் பிரத்யேக செய்தி வெளியானது. இதையடுத்து திரு.வி.க. பாலத்தில் நேற்றிரவு கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறையினர், பைக் ரேஸில் ஈடுபட்ட 19 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பைக்கில் வந்தவர்களில் பெரும்பாலோனார் சிறுவர்கள் என்பதால் அவர்களின் பெற்றோரை வரவழைத்து காவல்துறையினர் அறிவுறுத்தினர்.