மதுரை மாநகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு காத்திருந்து மதுக்குடிப்போர் மது வாங்கிச் செல்கின்றனர்.
மதுரை மாநகர் மற்றும் பரவை பேரூராட்சி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதிகளில் வரும் 5 ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் அங்குள்ள மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மதுக்குடிப்போர்கள் மதுரை புறநகர் பகுதியான அலங்காநல்லூர், வாடிப்பட்டி, தேனூர் ,சோழவந்தான் பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நிற்கும் அவர்கள் , தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் பல கிலோ மீட்டர்கள் தூரத்தில் நின்று மது வாங்கி வருகின்றனர். இதனால் அங்கு கொரோனா வைரஸ் பரவும் அச்சம் அதிகமாக உள்ளது.