தமிழ்நாடு

பொதுமக்களை, ஒருமையில் பேசினாரா வட்டாட்சியர்?: வெளியான வீடியோவால் பரபரப்பு

பொதுமக்களை, ஒருமையில் பேசினாரா வட்டாட்சியர்?: வெளியான வீடியோவால் பரபரப்பு

webteam

கோயம்பேட்டில் இருந்து பெரம்பலூர் வந்த மக்களை தனிமைப்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், வட்டாட்சியர் ஒருவர் மக்களை ஒருமையில் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து வந்த பசும்பலூர் கிராம மக்களை, தனிமைப்படுத்தி வைக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து வேப்பந்தட்டை பகுதி வட்டாட்சியர் கவிதாவிற்கும், ஊர் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, வட்டாட்சியர் கவிதா, பொதுமக்களிடம் ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, வட்டாட்சியர் கவிதாவிடம் கேட்டபோது, பசும்பலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணிகண்டன் என்பவரின் தூண்டுதலின் பேரில் பொதுமக்கள் தன்னை தரக்குறைவாக பேசி தாக்கமுற்பட்டதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.