தமிழ்நாடு

உடல் நலக்குறைவு காரணமாக டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக்குறைவு காரணமாக டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி

webteam

உணவு ஒவ்வாமை மற்றும் காய்ச்சல் காரணமாக டிடிவி தினகரன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதற்காக அவர் தஞ்சையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று காலை முதல் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்தார். இதையடுத்து டி.டி.வி.தினகரனுக்கு உணவு ஒவ்வாமை பிரச்னை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர், தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் காய்ச்சல் மற்றும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.