தமிழ்நாடு

தஞ்சை: மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா - நடன கலைஞர்கள் உற்சாகம்

webteam

மகா சிவராத்தியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழாவை ஏராளமான இசை ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் தொடர்ந்து 20-வது ஆண்டாக பிரகன் நாட்டியாஞ்சலி நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இவ்விழாவை பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன், தென்னக பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 7 நாட்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது,

இதையடுத்து இரண்டாம் நாளான நேற்று ஹைதரபாத் சங்கரானந்த கலா ஷேத்ரா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 51 குழுக்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்து வருகின்றனர். நாட்டின் புகழ்பெற்ற நடன கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.

இதில், பரதநாட்டியம் குச்சிப்புடி, கதக், ஒடிசி மற்றும் மோகினியாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் இசை ரசிகர்கள் கண்டு ரசித்த வருகின்றனர்.