தமிழ்நாடு

மனிதர்களைக் கொல்லும் முதலைகள் : அச்சத்தில் அணைக்கரை மக்கள் (வீடியோ)

மனிதர்களைக் கொல்லும் முதலைகள் : அச்சத்தில் அணைக்கரை மக்கள் (வீடியோ)

webteam

கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் காணப்படும் குட்டைகளில் முதலைகள் அதிகரித்துள்ளன. மனிதர்களைக் கொல்லும் முதலைகளை வேறு இடத்தில் கொண்டு சென்று விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து தொடர்புகொண்டபோது, நாகை, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காடு மற்றும் ஏரிகளில் பிடிக்கப்படும் முதலைகள் கீழணையில் தான் விடப்படுவதாகக் கூறினர். மேலும், கீழணையிலுள்ள அனைத்து முதலைகளையும் தனியாக வளர்ப்பதற்கு ஏற்ற முதலைப்பண்ணை தற்போது இல்லை என்றும் அவர்கள் விளக்கமளித்தனர்.