தமிழ்நாடு

ஆட்சியர் அலுவலகத்தில் தோப்புக்கரணம் போட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆட்சியர் அலுவலகத்தில் தோப்புக்கரணம் போட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

webteam

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோப்புக்கரணம் போட்டும், நெல்மணிகளை வீசியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இரு தரப்பு விவசாயிகள், 
6 ஆண்டுகளாக விவசாயக் காப்பீட்டு தொகையைக் கேட்டால் மத்திய, மாநில அரசுகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி கை காண்பிப்பதாகக் குற்றம்சாட்டினர். இதனை குறிப்பிட்டு மத்திய, மாநில அரசுகள் ‘உன்னால நான் கெட்டேன், என்‌னால நீ கெட்ட’ என்று கூறுவது போல் ஆட்சியர் முன் தோப்புக்கரணம் போட்டனர். இதைடுத்து குறைதீர்ப்புக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் நெல்மணிகளைத் தரையில் வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.