ஆர்.எஸ்.பாரதி pt desk
தமிழ்நாடு

தஞ்சாவூர் | "நாம் ஒற்றுமையாக இருந்தால் யார் தயவும் நமக்குத் தேவையில்லை” – ஆர்.எஸ்.பாரதி

திமுகவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. நமக்குள் உள்ள குழப்பங்களால் தான் பிரச்னை ஏற்படுகிறது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி பேசினார்.

PT WEB

செய்தியாளர்: ராஜா

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பூக்கொல்லை பகுதியில் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்...

முதலில் கட்சிக் காரர்களை மதிக்க வேண்டும்:

திமுகவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. நமக்குள் உள்ள குழப்பங்களால் தான் பிரச்னை ஏற்படுகிறது. அதேபோல் பொறுப்பாளர்கள் மக்களை மதிக்க வேண்டும். மக்களை கூட மதிக்க வேண்டாம் கட்சிக்காரர்களை முதலில் மதியுங்கள் அது போதும் நமக்கு. ஏனென்றால் கட்சிக்காரன் நொந்து போய் மற்றவரிடம் நம் கட்சியைப் பற்றி குறை சொன்னால் பத்து வாக்குகள் நமக்கு வீணாகிறது, இதை மேடையில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் ஒற்றுமையாக இருந்தால் எவன் தயவும் நமக்குத் தேவையில்லை:

நம் கட்சிக்காரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து நின்றால் 'எவன்' தயவும் நமக்குத் தேவையில்லை”என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்கள் மத்தியில் திமுகவுக்கு பெருகும் ஆதரவு:

ராமர் பெயரை சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றியவர்கள் அயோத்தியிலேயே தோற்கடிக்கப்படுவார்கள் என்று நான் சொன்னது நடந்தது. அதேபோல் தமிழகத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் 71 சதவீதம் ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் 29 சதவீதம் எதிராக இருப்பதாகவும் அந்த 29 சதவீதமும் ஸ்டாலின் மீது வெறுப்பு இல்லை. உள்ளூர் அரசியல் தலைவர்களால் ஏற்படும் அதிருப்தி தானே தவிர ஸ்டாலின் மீது வெறுப்பு இல்லை.

வைத்திலிங்கம் நம்ம ஆளு, எப்போது வேண்டுமானாலும் இங்கு வருவார்:

வைத்திலிங்கத்தை யாரும் தரக்குறைவாக விமர்சிக்காதீர்கள். ஏனென்றால் அவர் நம்ம ஆளு, எப்பொழுது வேண்டுமென்றாலும் அவர் இங்கு வரக்கூடும். நாளை இந்த மேடையில் அமரக் கூடும், அண்ணா திமுகவில் அப்படித்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

vaithilingam

பேராவூரணி பட்டுக்கோட்டை தொகுதி என்றாலே கோஷ்டி பூசல் என்பது அனைவருக்கும் தெரியும், தலைவரே சொல்வார், அப்படி இருந்தும் இந்த குழப்பத்திற்கு இடையிலே தான் இரண்டு தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறோம். கோஷ்டி பூசலில் தற்பொழுது சமீபத்தில் தான் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த அண்ணாதுரை மாற்றப்பட்டு பழனிவேல் பொறுப்புக்கு வந்துள்ளார்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி பேசினார்.