கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்பை படிக்க இயலாமல் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல்களையும், மத்திய மாநில அரசுகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தினர். இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.