இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என அக்கட்சி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழச்சி தங்கபாண்டியன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டம் நடத்தும் மாணவர்களின் குரல்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்துக்கு செய்யப்படும் துரோகம் என கூறினார்.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என்ற அதிமுகவினரின் கோரிக்கை குறித்த கேள்விக்கு, இந்திய குடியுரிமை வேண்டும் என்பதே திமுக-வின் நிலைப்பாடு என கூறினார்.