தமிழ்நாடு

தமிழக முதல்வரும் குடியுரிமை சட்டத்தை எதிர்க்க வேண்டும்: எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி

தமிழக முதல்வரும் குடியுரிமை சட்டத்தை எதிர்க்க வேண்டும்: எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி

webteam

கேரளா, மேற்கு வங்க மாநிலங்களைப் போல் தமிழக முதல்வரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

ஒசூரில் மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான தமீமும் அன்சாரி செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, “நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் திரள் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. 30 ஆண்டுகள் உல்லாத வகையில் இந்தியாவில் மக்களே தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர்.

சாதி, மதமின்றி அரசியல் சாசனத்தை பாதுகாக்க இளைஞர்கள் மாணவர்கள் ஜனநாயகத்தை மீட்கவும் களத்தில் இறங்கிருப்பநு மிகப்பெரிய நம்பிக்கையை தருகிறது. அரசியல் சாசனத்தை காக்க பீகாரில் பாஜக கூட்டணி சட்டத்தை பல்படுத்த மாட்டோம் என நிதிஷ் அறிவிப்பு விடுத்திருக்கிறார்.

மேற்கு வங்காளம், கேராளா உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என துணிச்சலுடன் அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவிப்பு செய்ததைபோல் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முடிவு எடுக்க வேண்டும்.

அதை மீறி தமிழகத்தில் அமல்படுத்த நினைத்தால், தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்து சட்டமறுப்பு போராட்டத்தை முன்னெடுப்போம்.23 சென்னையில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மனித நேய ஜனநாயக கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.