வாழ்ந்து போராட வேண்டும் என்ற எண்ணத்தை மாணவ மாணவிகள் உறுதிமொழியாக எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நீட் தேர்வு காரணமாக மன உளைச்சலில் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்துக்கொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம். மாணவர் விக்னேஷின் மரணம் நீட் தேர்வுக்கு எதிரான நடைமுறை சிக்கல்களை மீண்டும் மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
இத்தருணத்தில் ஒன்றை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறோம். தற்கொலை இதற்கு தீர்வல்ல. இது தங்களை ஈன்ற பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆறாத ரணத்தை ஏற்படுத்தும் என்பதை மாணவ, மாணவிகள் புரிந்துக் கொள்ள வேண்டும். எனவே வாழ்ந்து போராட வேண்டும் என்ற எண்ணத்தை, தற்கொலை எதிர்ப்பு தினமான இன்று உறுதி மொழியாக முன்னெடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகளை கேட்டுக் கொள்கிறோம். மாணவர் விக்னேஷை இழந்து வாடும் பெற்றோருக்கும், உறவுகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.