தமிழ்நாடு

பிரதமரைச் சந்திக்க முடியவில்லை: தம்பிதுரை வருத்தம்

பிரதமரைச் சந்திக்க முடியவில்லை: தம்பிதுரை வருத்தம்

webteam

தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளை எடுத்துரைப்பதற்காக பிரதமர் மோடியைச் சந்திக்க முயன்றாலும், வாய்ப்பு மறுக்கப்படுவதாக அதிமுக எம்பியும், மக்களவை துணைசபாநாயகருமான தம்பிதுரை வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச்சட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். குடியரசுத்தலைவருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும், தங்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.