தமிழ்நாடு

நீட் விவகாரத்தில் வரும் காலங்களில் விலக்கு பெற முயற்சிபோம்: தம்பிதுரை

webteam

நீட் தேர்வு‌ விவகாரத்தில் தமிழக அரசு போராடியும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம்கொண்டு வர மீண்டும் குரல் எழுப்புவோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததால், தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, "நீட் விவகாரத்தில் விலக்கு பெற முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பலமுறை வலியுறுத்தினார். தமிழக அரசு சார்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுவிட்டதால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தலைவணங்கி செயல்படுத்துவது தான் அரசின் கடமை. எதிர்காலத்தில் வாதாடி ஏதாவது செய்ய பரிசீலனை செய்யப்படும். நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம்கொண்டு வர மீண்டும் குரல் எழுப்புவோம்" என தெரிவித்தார்.