ஜவுளித் துறையை ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் கீழ் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் இன்று போராட்டங்கள் நடைபெற உள்ளன.
ஈரோட்டில் ஜவுளி விற்பனையாளர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கரூரிலுள்ள தறிப் பட்டறைகள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. ராஜபாளையத்திலும் இன்று 5 ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தி வைக்கப்பட உள்ளன. இதனால் அங்கு ஒரு 2 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை மாநகரிலும் இன்று ஜவுளி கடைகள் அடைக்கப்பட உள்ளன. ஜிஎஸ்டியால் நாட்டில் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என மும்பை ஜவுளி வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது