ஆசிரியர் காலி பணியிடங்கள்  முகநூல்
தமிழ்நாடு

2026-ல் இரண்டு முறை டெட் தேர்வு., தேர்வு அட்டவணையை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம்.!

2026-ம் ஆண்டில் மே மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை டெட் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

PT WEB

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2026-ம் ஆண்டுக்கான தற்காலிக தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தாண்டுக்கான டெட் தேர்வு 2 முறை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, முதல் தேர்வு மே மாதம் அறிவிப்பு வெளியாகி ஜூலை மாதத்தில் நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து இரண்டாவது தேர்வு அக்டோபர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகி டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.

டெட் தேர்வு

அதே நேரத்தில், ”அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது; அதன் தேர்வு மே மாதம் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பிப்ரவரி மாதத்தில் அறிவிப்பு வெளியாகி ஜூன் மாதத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செட் தேர்வு அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு தற்காலிகமானது என்றும் இதில் மாற்றம் ஏற்படலாம். எத்தனை இடங்கள் என்பது தொடர்பான உள்ளிட்ட அறிவிப்புகள் விரிவாக அந்தந்த மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.