2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடாக தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. நாகர்கோவில், சேலம், புதுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெல் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படுகின்றனவா என உறுதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகளின் தொடக்கமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பரிசோதிக்கும் பணிதொடங்கியது. நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தின் 6 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பரிசோதிக்கும் பணியில் பெல் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை பரிசோதனை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆறு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை பரிசோதிக்கும் பணியில் பெல் நிறுவன பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் கோவை, விழுப்புரம், கடலூர், சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பரிசோதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.