ஓடும் அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் pt desk
தமிழ்நாடு

தென்காசி | ஓடும் அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் - நல்வாய்ப்பாக உயிர்தப்பிய பயணிகள்!

கடையநல்லூர் அருகே அரசு பேருந்தின் பின்பக்க ஜாயிண்ட் கழன்று விபத்து. பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டமாக உயிர் தப்பினர்.

PT WEB

செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்தை, வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த சங்கரன் (52) என்பவர் மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி ஓட்டி வந்துள்ளார். அப்போது, தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் வந்தபோது, அரசு பேருந்தின் பின்புறம் உள்ள லேயர் ஜாயிண்ட் வீலிங் மொத்தமாக கழன்று ஓடியயதால் பெரும் விபத்து ஏற்பட்டது

இதனால் பேருந்தில் பயணித்த சுமார் 87 பயணிகளில் மாணவர்கள் உட்பட நான்கு நபர்களுக்கு லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதையடுத்து லேயர் ஜாயிண்ட் கட்டான நிலையில் பேருந்தை மெதுவாக இயக்கி வந்ததாலும் சாதுரியமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர் சங்கரன் என்பவரால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து லேசான காயமடைந்தவர்கள் கடையநல்லூர அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் அங்க பரபரப்பை ஏற்படுத்தியது.