Accident pt desk
தமிழ்நாடு

தென்காசி: லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தென்காசி அருகே சிமெண்ட் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

webteam

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகில் உள்ள சிங்கிலிபட்டிக்கும் புன்னையா புரத்திற்கும் இடையே உள்ள சாலையில் சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், குற்றாலத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Road accident

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சொக்கம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காரில் வந்தவர்கள் தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.