வயல் வெளியில் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்து pt desk
தமிழ்நாடு

தென்காசி: 45 குழந்தைகளுடன் வயல் வெளியில் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்து – 6 மாணவர்கள் காயம்

தனியார் பள்ளி பேருந்து வயலில் கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: டேவிட்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளி பேருந்தில் சென்றுள்னர். அப்போது நொச்சிகுளம் - வீரசிகாமணி சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி பேருந்து அருகேயுள்ள வயல் வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், காயமடைந்த நான்கு குழந்தைகள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும் ; சிறு சிறு காயங்களுடன் 2 குழந்தைகள் வீரசிகாமணி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரிய அளவு உயிர் சேதம் இல்லை என்ற போதிலும், ஒரே வாகனத்தில் 45 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வேகமாக செல்வதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து விபத்து நடந்த இடத்தில் ஊர் பொதுமக்கள் குவிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.