தமிழ்நாடு

தென்காசி: தென்மேற்கு பருவமழை எதிரொலி; குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி: தென்மேற்கு பருவமழை எதிரொலி; குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

kaleelrahman

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாக இருக்கும். இந்த சீசன் காலத்தில் இங்கு 10 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த இரு தினங்களாக பெய்து வருகிறது.

இதனால் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழையும், சாரல் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று காலை முதல் குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி மற்றம் ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சீசனில் இது முதல் வெள்ளப்பெருக்காகும். கொரோனா காரணமாக ஏற்கெனவே அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.