தமிழ்நாடு

தென்காசி: ஷூவில் பதுங்கியிருந்த கொம்பேறி மூக்கன் பாம்பு.. ஷாக் ஆன பள்ளி மாணவன்!

webteam

சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவனின் காலணிக்குள் பாம்பு இருந்ததை அறிந்த மாணவன் பாம்பு மீட்பாளருக்கு தகவல் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். சிறைக் காவலராக பணிபுரிந்து வரும் இவர், வழக்கம்போல் பணிக்குச் சென்று விட்ட நிலையில், இவரது மகன் பள்ளிக்குச் செல்ல காலணி எடுத்து மாட்ட முயன்றுள்ளார். அப்போது காலணிக்குள் பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவன் கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்த உறவினர்கள் மாணவனின் காலணிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு உடனடியாக சங்கரன்கோவிலைச் சேர்ந்த பாம்பு மீட்பாளர் பரமேஸ்வர தாஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமேஸ்வரதாஸ், காலணிக்குள் பதுங்கி இருந்த கொம்பேறி மூக்கன் பாம்பை உயிருடன் பிடித்துச் சென்று காட்டுப் பகுதியில் விட்டார்.

காலணிக்குள் பாம்பு இருப்பதை அறிந்து குழந்தைகள் உடனே தகவல் கொடுத்ததால் பேராபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.