செய்தியாளர்: டேவிட்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால், வீரசிகாமணியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் அம்மன் நகர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
குறிப்பாக இந்தப் பகுதியில் கன மழையினால் சுமார் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், நெல் போன்ற விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. இதையடுத்து மழைநீர் வெளியேற முடியாமல் வயல்வெளி முழுவதும் வெள்ளைக்காடாக காட்சியளித்தது.
வீரசிகாமணி பகுதியில் உள்ள 2000 ஏக்கர் விலை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.