தமிழ்நாடு

தென்காசி: தந்தையை போலீஸ் தாக்கியதாகக்கூறி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்

தென்காசி: தந்தையை போலீஸ் தாக்கியதாகக்கூறி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்

Veeramani

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தந்தையை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள புளியரை தாட்கோ நகர் பகுதியைச் சேர்ந்த பிரான்ஸிஸ் என்பவர், ரேசன் அரிசியை கடத்தியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், விசாரணையின் போது பிரான்ஸிசை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரான்ஸிசின் மகள் அபிதா புகார் அளித்திருந்தார்.

ஆனால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி செல்போன் டவர் மீது ஏறி அபிதா போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் ஐந்து மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியபின்னர் அவர் செல்போன் டவரிலிருந்து கீழே இறங்கினார்.