தமிழ்நாடு

'உயிரை பணயம் வைத்து பயணம்' தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்கள்

JustinDurai

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்த 10 பேர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் வாய்மொழி உத்தரவுப்படி மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

செவ்வாயன்று இரவு வவுனியாவில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 தமிழர்கள் தனுஷ்கோடி அருகே கம்பிபாடு பகுதியில் தஞ்சமடைந்தனர். அவர்களை மரைன் காவல்துறையினர், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்களில் 6 சிறார்கள் தவிர 4 பேர் மீது, சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் வந்தது, முறையான ஆவணங்கள் இன்றி வந்தது என 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ராமேஸ்வரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவர்களை ஆஜர் படுத்தினர். அவர்களை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் அடைக்க ஆணை தயாராகி வருவதாக மரைன் காவல்துறையினர் கூறியதால், அவர்களின் சிறைக்காவல் தேதியை அறிவிக்காமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் ராமநாதபுரம் ஆட்சியரின் வாய்மொழி உத்தரவின் பேரில், அந்த பத்து பேர் மட்டும் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். ஏற்கனவே இதேபோல வந்த 6 பேரை புழல் சிறைக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: அத்யாவசியப் பொருட்களுக்கு தவிக்கும் மக்கள் - கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை