தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது web
தமிழ்நாடு

நீலகிரி| வெப்பநிலை -1°Cஆக பதிவு.. உதகையை உறைய வைக்கும் உறைபனி!

உதகையில் நிலவி வரும் கடும் உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை நிலவரப்படி வெப்பநிலை மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.

PT WEB

நீலகிரி மாவட்டம் உதகையில் கடும் உறைபனியால் வெப்பநிலை -1°C ஆக குறைந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, நகரின் பல பகுதிகள் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கின்றன. இந்த நிலை ஜனவரி மாதம் வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாக உறைபனி நிலவி வருகிறது.

குறிப்பாக, உதகையில் வெப்பநிலைமை னஸ் ஒரு டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவானது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தன.

நீலகிரி

உதகை தாவரவியல் பூங்கா, குதிரைபந்தய மைதானம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் உறைபனி காணப்பட்டது. சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களின் மீது பனிப்படர்ந்து காட்சியளித்தது.

பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் காணப்படும் உறைபனி இந்த முறை ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என கருதப்படுகிறது. தொடர்ந்து நீடிக்கும் உறைப்பனிகாரணமாக தேயிலைத் தோட்டதொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.