தமிழ்நாடு

அப்பாடா: குறையுதாம் அனல்!

அப்பாடா: குறையுதாம் அனல்!

Rasus

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பல இடங்களில்

மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம்

தெரிவித்துள்ளது.

வட தமிழகத்தின் சில பகுதிகளில் அனல்காற்று வீசும் என்றும்

தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 108 டிகிரி

வெயில் சுட்டெரித்தது. வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட்டும்,

சென்னையில் 104 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது. முந்தைய

நாட்களுடன் ஒப்பிடும்போது சென்னையில் நேற்று வெயிலின் தாக்கம்

சற்று குறைவாகவே இருந்தது.

வட தமிழகத்தின் சில இடங்களில் அனல்காற்று படிப்படியாக குறையும்

என வானிலை மையம் தெ‌ரிவித்திருக்கிறது.