தமிழ்நாடு

தொழில்நுட்பக் கோளாறு: தடைபட்ட மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும் - நிர்வாகம்

kaleelrahman

சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து சமிக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்ய பட்டுள்ளதால் இன்று காலை முதல் அனைத்து வழிதடங்களுக்கும் வழக்கம் போல ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோயம்பேடு இயக்க கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நேற்று மாலை 4:30 மணியிலிருந்து மெட்ரோ ரயில் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், மெட்ரோ ரயில் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள சமிக்கை தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் உள்ள புசநநn வழித்தடம் மற்றும் டீடரந வழித்தடத்தில் ரயில்கள் தாமதாமாக இயக்கப்பட்டன.

நேற்று மாலை 4:30 மணி அளவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நெரிசல் மிகு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பத்து நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது. இதனால் சென்னையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தொழில்நுட்ப வல்லுனர்கள் மேற்கொண்ட முயற்சியில் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், இன்று காலை முதல் வழக்கம்போல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.