திண்டுக்கல் சீனிவாசன் pt desk
தமிழ்நாடு

நமது வெற்றிக்கு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் உறுதுணையாக இருப்பார்கள் - திண்டுக்கல் சீனிவாசன்

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையொப்பமிட்டு மத்திய அரசிற்கு அனுப்பியது முதல்வர் ஸ்டாலின் தற்போது மக்களை ஏமாற்ற கபட நாடகம் ஆடி வருகிறார் என்று முன்னாள் ;அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

PT WEB

செய்தியாளர்: காளிராஜன் த

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக அம்மா பேரவை சார்பாக திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர்...

EPS

குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் கொடுத்துவிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏற்றிவிட்டனர்:

தமிழகத்தில் நீட் தேர்வால் 15 மாணவர்கள் இறந்த நிலையில், அவர்களது குடும்பம் தற்போது அப்பா அப்பா என்ற இவரை அழைப்பார்கள். தாத்தா என்று அழைப்பவர்கள் அப்பா என்று அழைப்பதை தனக்கு பெருமையாக கருதும் முதல்வர் ஸ்டாலின், ஆங்கிலத்தில் அங்கிள் என்று அழைத்து மகிழச் செய்யட்டும். குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி சாமானிய மக்களின் வயிற்றில் அடித்த அரசு தான் திமுக அரசு.

மும்மொழிக் கொள்கையை ஆதரவு தெரிவித்தவர் ஸ்டாலின்:

முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக தற்போது மும்மொழிக் கொள்கைக்கு எதிராக போராட்டம் நடத்தும் நாடக்தை மக்கள் புரிந்து கொள்வார்கள். கடந்த ஆண்டு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தலைமைச் செயலகத்தில் தனது உதவியாளரை வைத்து ஆதரவு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், தற்போது கபட நாடகம் ஆடி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்த கடிதம் தற்போது மத்திய அரசிடமும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடமும் உள்ளது.

cm stalin

இந்தியை படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. திணிக்க வேண்டாம் என்றுதான் கூறி வருகிறோம்:

இதனை திமுக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் யாரும் மறுக்க முடியாது இல்லை என்று மறுத்தால்; தூக்கில் தொங்க தயார். அதேசமயம் தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் நாங்களும் இந்தியை படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. இந்தியை திணிக்க வேண்டாம் என்றுதான் கூறி வருகிறோம். மும்மொழிக் கொள்கை எங்களுக்கு வேண்டாம். இந்தி படிப்பவர்கள் எங்களுக்கு எதிரி கிடையாது.

2026 தேர்தலில் நமது வெற்றிக்கு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதேபோல் கழகத் தொண்டர்களும் அடுத்தடுத்து வேலைகளை செய்து எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக அமர்த்தி அம்மாவின் பொற்கால ஆட்சியை மலரச் செய்ய வேண்டும் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.