தமிழ்நாடு

பட்டப் பகலில் பள்ளி ஆசிரியர் வெட்டிக் கொலை - தூத்துக்குடி குரூரம்

பட்டப் பகலில் பள்ளி ஆசிரியர் வெட்டிக் கொலை - தூத்துக்குடி குரூரம்

Rasus

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே, பள்ளி ஆசிரியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள புதூரில், வட்டார வள மையம் சிறப்பு பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியராக பணியாற்றியவர் வடிவேல் முருகன். இவர் பள்ளிக்கு அருகிலேயே ஒரு நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக வடிவேல் முருகனின் மைத்துனர் அற்புத செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பகை காரணமாக கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது, வடிவேல் முருகனுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆன நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனிடையே வடிவேலு முருகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. தம் சகோதரியை, குழந்தையுடன் தவிக்கவிட்டு விட்டு சென்றுவிட்டாரே என்ற ஆத்திரத்தில் வடிவேல் முருகனை அற்புத செல்வம் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.