சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை மாவட்டம் முழுமையாகவும், திருவள்ளூர்,செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வைரஸ் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளிலும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட இப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் சுமார் 150 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தெரியவந்துள்ளது. சென்னையில் ஏற்கனவே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில்தான் இந்த உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது.