தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு?

தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு?

webteam

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் மதுபானங்கள் விற்கப்படுகின்றன என்ற வாதத்தையடுத்து, டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் கட்டுப்பாடுகளுக்கு இடைக்கால தடைவிதித்து உள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது.