சென்னை ஐஐடி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் காலை 7 மணிக்கே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது அம்பலமாகி உள்ளது.
சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்கப்பட்டு வருவதை புதிய தலைமுறை படம்பிடித்துள்ளது.
ஒரு குவாட்டர் விலை 150 ரூபாய் வரை விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கடைமுன்பாக குடிமகன்கள் தள்ளாடுவதும் படுத்து கிடப்பதும் அவ்வழியாக செல்வோரை முகம் சுழிக்க வைக்கிறது. தினந்தோறும் இதுபோன்ற சட்டவிரோத மது விற்பனை நடப்பதாகவும் அது குறித்து புகார் தெரிவித்தும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடையை அகற்றக்கோரி ஏற்கனவே பல முறை மக்கள் போராட்டங்களை நடத்தியும், இதுவரை எந்த பயனும் இல்லை எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.