தமிழ்நாடு

கடையை அடைச்சும் கல்லா கட்டுது டாஸ்மாக்!

கடையை அடைச்சும் கல்லா கட்டுது டாஸ்மாக்!

webteam

கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு மது விற்பனை மூலம் ஆயிரத்து 149 கோடி ரூபாய் கூடுதலாக தமிழக அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை கொள்கை விளக்க குறிப்பில், மது விற்பனையில்லாத நாட்கள் 5 நாட்களில் இருந்து 8 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல் தொடர்புடைய நாட்கள் மது விற்பனையில்லாத நாட்களாகவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
2016-2017ம் ஆண்டில் மது விற்பனை மூலமாக அரசுக்கு வருவாய் மற்றும் மதிப்புக் கூட்டு வரி மூலம் 26 ஆயிரத்து 995 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும், அது, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஆயிரத்து 149 கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.