தமிழ்நாடு

குற்றங்கள் அதிகரிப்புக்கு மதுக்கடைகள் தான் காரணம் - வைகோ

குற்றங்கள் அதிகரிப்புக்கு மதுக்கடைகள் தான் காரணம் - வைகோ

webteam

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்புக்கு மதுக்கடைகள் தான் காரணம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாப்பட்டியில் நடைபெற்ற தனது கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மணமக்களை வாழ்த்தினார். பின்னர் பேசிய அவர், தற்போது 5% மாணவர்கள் மட்டும் குடிக்கிறார்கள். இதே நிலைமை நீடித்தால் 50% சதவீத மாணவர்கள் குடிக்கு அடிமையாகி விடுவார்கள். 5 வயது, 7 வயது சிறுமிகள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகி உயிர் இழக்கின்றனர். இப்படி இருக்கும் போது 18 வயது பெண்களின் நிலை என்னாகும் என கேள்வி எழுப்பினார். மேலும், வைகோ டாஸ்மாக் கடைகளை உடைக்க சொல்கிறார் என்று முன்பு குற்றச்சாட்டு கூறினார்கள். ஆனால் தற்போது அது நடந்து கொண்டு இருக்கிறது என்றும், மதுக்கடைகளை ஓழிக்க பெண்கள், மாணவர்கள் போராட வேண்டும் என்றும் தெரிவித்தார்.